Sunday, December 20, 2009

இலங்கை யின் போர்க்குற்றங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன – IFJ அறிக்கை

கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு (IFJ) விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்தும் ifj-international-federation-of-journalistsசுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தலில் களமிறங்கியுள்ள இரு வேட்பாளர்களிடையே உள்ள போட்டியானது இந்த போர்க்குற்றங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவருகின்றன. வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் ஊடகங்கள் முகம்கொடுத்த வன்முறைகள் இப்போது வெளிக்கொணரப்படுகின்றன எனக் கூறியுள்ளது IFJ.
மேலும் கடந்த ஓகஸ்ட் மாதம் சனல் 4 ஒளிபரப்பிய இன அழிப்பு வீடியோ ஒரு போலித்தயாரிப்பு என இலங்கை அரசு தட்டிக் கழித்திருந்தாலும் அது உண்மையான வீடியோ என அமெரிக்காவிலுள்ள கொலராடோ நிறுவனம் மற்றும் பிரிட்டிஷ் டெய்லி டைம்ஸ் ஆகியன நிரூபித்து அங்கீகரித்துள்ளன. இதனால் போர் குற்றக் குற்றச்சாட்டுகள் மேற்படி ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு எதிராக புதிதாக மீண்டும் எழுப்பப்பட்டுள்ளன என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment | Feed

Post a Comment

இது சம்பந்தமான உங்கள் கருத்தை தெரிவியுங்கள் ...



 

தமிழ் செய்திகள் Copyright © 2009 Premium Blogger Dashboard Designed by SAER