நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு மோசடியில் ஈடுபடுவதற்கென தென்னிலங்கையில் இருந்து வன்னிக்கு சிங்களவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.இன்று முற்பகல் 9மணியளவில் 20ற்கும் அதிகமான பேரூந்துகளில் இவர்கள் ஓமந்தை வீதி ஊடாக மாங்குளம் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்னளர்.
இவர்கள் நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மக்களின் வாக்கு அட்டைகளைப் பயன்படுத்தி மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிப்பர் என அவர்களில் ஒருவர் அரசியல்வாதி ஒருவருக்கு இரகசியமாக அறிவித்துள்ளார்.
இவர்களை விடவும் இன்னும் பல பேரூந்துகளும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு என ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தவிடயம் குறித்து எதிரணி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் ஆயிரக்கணக்கானோருக்கான வாக்காளர் அட்டைகள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
![[PrtScr+capture_6.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI4Xx20NAKhSakcVmBoOiAEExTDY-psREXaTCcurZxXbgn1JyL4Z-fxijaRb4KC2LtoD0hGC_vKiZOCy8WP61BlDFMJi_AdbgoCM1Jwv1NO3LlDeP5ooQVcKsNUlG94Efhxa71qWVoatg/s1600/PrtScr+capture_6.jpg)
0 comments: