Tuesday, January 26, 2010

பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீடு சிங்களவர்களின் சுற்றுலாத் தளமாகியுள்ளது

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறையில் உள்ள வீடு தென்னிலங்கையிலிருந்து யாழ் செல்லும் சிங்களச் சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலாத்தளமாக மாறியுள்ளது.


யுத்தம் தற்போது முடிவடைந்து சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஏ – 9 வீதியினூடாக அதிகளவிலான தென்னிலங்கை சிங்களவர்கள் சுற்றுலாப் பயணிகளாகவும் வியாபாரிகளாகவும் யாழ்ப்பாணம் செல்கின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்தில் பல இடங்களினை பார்வையிடுகின்றனர். இவர்கள் பார்வையிடும் இடங்களில் ஒன்றாக தற்போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த வல்வெட்டித்துறை வீடும் மாறியுள்ளது.

படையினரால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டு உடைந்த நிலையில் காட்சியளிக்கும் தேசியத்தலைவர் பிரபாகரனின் வீட்டிற்கு முன்னால் நின்று இவர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.


அத்துடன் பிரபாகரன் வீட்டு முற்றத்தில் உள்ள மண் சிறிதளவை தம்முடன் எடுத்துச் செல்வதையும் காணக் கூடியதாகவிருக்கின்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வரும் ஜனாதிபதி தோ்தல் முடிந்ததும் ஏ9 பாதை மூடப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால், கடந்த சில நாட்களாக வல்வெட்டித்துறை செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment | Feed

Post a Comment

இது சம்பந்தமான உங்கள் கருத்தை தெரிவியுங்கள் ...



 

தமிழ் செய்திகள் Copyright © 2009 Premium Blogger Dashboard Designed by SAER