Tuesday, January 26, 2010

இலங்கை தேர்தல் : ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு

Front page news and headlines todayகொழும்பு : இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. தேர்தலையொட்டி அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் அதிகாலையில் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் காலையில் வாக்குப் பதிவு தொடங்கியபோது, பெருமளவில் வாக்காளர்கள் வரவில்லை. ஆனால் நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது.


அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே, யாழ்ப்பாணத்தின் பல சாலைகளில் டயர்களை போட்டு எரித்தும், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதவராளர்களின் வீடுகளைத் தாக்கியும், வெடிகுண்டுகளை வெடித்தும் வன்முறையில் ஈடுபட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


அடையாளம் தெரியாத மர்ம கும்பல், இலங்கை அதிபர் தேர்தலில் ஓட்டு போட வேண்டாம் என வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை விநியோகித்ததாக தெரிகிறது. தமிழர்கள் பலர் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர். அதிபர் ராஜபக்ஷே ஓட்டளித்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டிளித்த அவர் தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம் என்றார்.


நாளை முடிவு : இலங்கையில் அடுத்த அதிபர் யார் என்பது நாளை தெரியவரும். தேர்தலில் பதிவான ஓட்டுகள் உடனடியாக எண்ணப்பட்டு நாளையே முடிவுகள் வெளியாகின்றன. விடுதலைப்புலிகளக்கு எதிரான போரில் வெற்றி பெற வித்திட்ட சரத் பொன்சேகாவுக்கும் - ராஜபக்ஷேவுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

0 comments:

Post a Comment | Feed

Post a Comment

இது சம்பந்தமான உங்கள் கருத்தை தெரிவியுங்கள் ...



 

தமிழ் செய்திகள் Copyright © 2009 Premium Blogger Dashboard Designed by SAER